கோவையில் நேற்று பெய்த மழை அளவு

கோவை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்த நிலையில், நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:

அன்னூர் 13.70 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் 32 மில்லி மீட்டர், சின்கோனா 30 மில்லி மீட்டர், ஆழியார் 44 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் 33 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகள் 34 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா 32 மில்லி மீட்டர், சோலையார் 27 மில்லி மீட்டர், பொள்ளாச்சி 71 மில்லி மீட்டர், சூலூர் 13 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சுற்றுவட்டார பகுதிகளில் 17 மில்லிமீட்டர், கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10.6 மில்லி மீட்டர், கோவை தெற்கில் 14 மில்லி மீட்டர், பெரியநாயக்கன் பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 9.4 மில்லி மீட்டர் என மொத்தம் 380.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் சராசரியாக நேற்று 27.19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.