ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கூடைப்பந்து மைதான திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி நூலகர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் உமா விழாவிற்கு தலைமை வகித்து பேசினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே பேசும்போது, கூடைப்பந்து விளையாட்டில் மாணவர்கள் நுணுக்கமான யுக்திகளை பயன்படுத்தி விளையாட வேண்டும். இவ்விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் உடலும், மனமும் மிகுந்த உற்சாகமுடன் அமையும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே நட்புறவு அடிப்படையிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.