இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கமா?

நேரத்திற்கு தூங்கி நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும் என நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் சொல்லுவார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீக்கிரம் தூங்குவதும், எழுவதும் முக்கியமானது. குறிப்பாக நாம் எவ்வளவு மணிநேரம் தூங்குகிறோம் என்பதைப் போலவே நமது தூக்கத்தின் நேரமும் முக்கியமானது.

ஆந்தை போல இரவில் விழித்திருப்பவராக இருந்தால் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் ஒரு சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களுடன், நீங்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் வழக்கத்தை எளிதாக செய்யலாம்.

ஆயுர்வேத நிபுணரான டாக்டர் நித்திகா கோஹ்லி என்பவர் இது தொடர்பாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சிலர் சூரியன் எட்டிப்பார்ப்பதற்கு முன்பே எழுந்து, ஜாக்கிங் சென்று காலை உணவை உண்பார்கள். ஆனால் பலர் படுக்கையில் இருந்து எழுவதற்குள் சூரியன் பாதி உச்சிக்கே வந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஆயுர்வேதத்தின் படி, இரவு 10 மணிக்கு முன்பு தூங்கச் செல்வது சிறந்ததாக இருக்கும். அதேபோல், காலை 6 மணிக்கு முன் எழுந்திருக்க சிறந்த நேரம். ஆனால் மிக முக்கியமாக, ஆயுர்வேதம் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்க பரிந்துரைக்கிறது. அதாவது நீங்கள் காலை 5 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்கும் பழக்கத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இரவு உணவுக்குப் பிறகு குறைந்தது மூன்று மணிநேரம் தூங்க வேண்டும். படுக்கைக்கு முன் சூடான பால் மற்றும் குறைந்த சூடான மற்றும் காரமான உணவு போன்ற இயற்கை கொழுப்பு உணவுகளை சாப்பிடுங்கள். தூங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் எலக்ட்ரானிக்ஸை முடக்க வேண்டும்.

சிறந்த தூக்கத்திற்கு நன்றியுணர்வு பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு இரவும் நீங்கள் நன்றியுள்ள மூன்று அல்லது நான்கு விஷயங்களை நினைத்துப் பாருங்கள். சிறந்த தூக்கம் சிறந்த விடியலை உருவாக்குகிறது. என்று கூறினார்.

 

Source: News 18 Tamilnadu