கே.பி.ஆர் கல்லூரியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் செடி வளர்த்தல் போட்டி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு “பயன்படுத்திய பிளாஸ்டிக்கில் மறு பயன்பாடு முறையில் செடிகள் வளர்தல்” என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது. இதில் 350 க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்படுத்திய பிளாஸ்டிக்கில் பல்வேறு வகையான நறுமண செடிகள், மூலிகை செடிகள், உள்பட பல்வேறு அலங்கார செடிகளை வளர்த்து போட்டிக்கு வைத்திருந்தனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாதிரிகள் கல்லூரியின் அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் அகிலா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது பேசும்போது இது போன்ற போட்டிகள் மாணவர்களிடையே பிளாஸ்டிக் மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றார்.