முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் இன்று கல்லூரி நடைபெற்றது.

கல்லூரியின் துணை தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசென்ஸின் மென்பொருள் நிபுணர் நித்தியானந்தம், புனே, டெக் மஹிந்திரா மூத்த மென்பொருள் பொறியாளர் & மேலாளர், கிஷோர் குமார், சென்னை லார்சன் மற்றும் டர்போ இன்போடெக்கின் தகவல் பொறியாளர் சினேகா பிரியா மற்றும் சாக்கோ(ZACCO) சைபர் டிபென்ஸ் மையத்தின் மூத்த ஆய்வாளர் தீபக், ஆகியவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது வேலைவாய்ப்பிற்காக தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொண்டனர் என்பதை எடுத்துரைத்தனர். சைபர் செக்யூரிட்டி, ஹேக்கிங், இன்டெர்ஷாலா ஆப்-ஐ பயன்பாடு, மற்றும் தொழிற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தினர். புரோகிராம்மிங் லாங்குவேஜ் (Programming Language) கற்றுக்கொள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். தங்களது தொழில் அனுபவங்களையும் மேலும் பல சுவாரசியமான சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய நவீன தொழில்நுட்ப முறைகளையும் அதன் மூலம் சமுதாயத்திற்கு தேவையான தொழில்நுட்ப பயன்பாடுகளை வழங்குவதற்கு மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார் செய்துகொள்வது போன்றவற்றையும் எடுத்து கூறினார்கள்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சரவணன், அனுப்பிரியா, உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.