கே.பி.ஆர். கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கணினி அறிவியல், தரவு பகுப்பாய்வுத் துறை  மற்றும் நுண்ணறி ஆய்வகம் இணைந்து வியாழக்கிழமையன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் சயின்ஸ் மாணவர்களுக்கு டேட்டா சயின்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் திறனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நுண்ணறி ஆய்வகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் நவநீத் மற்றும் கோயம்புத்தூர்  ஐஓடி – பிரிவுத் தலைவர் திமோதி டி பால் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை வகித்தார்.

நுண்ணறி ஆய்வகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான நவநீத் பேசும் போது, தற்போதைய சூழ்நிலையில் நிலவும் தரவு அறிவியல் (AI, ML, DL) மற்றும் அனலிட்டிக்ஸ் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். வெவ்வேறு தரவு பகுப்பாய்வுக் கருவி, தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி ஒரு மாதிரியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் மாதிரியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர் விளக்கினார். கோயம்புத்தூர் நுண்ணறி ஆய்வகம் ஐஓடி-பிரிவுத் தலைவர் திமோதி டி பால் நிகழ்ச்சியில் பேசும் போது நிரலாக்க மொழியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். இளம் தலைமுறையினர்க்கு நுண்ணறி ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஐஓடி பயன்பாடுகளை அவர் விளக்கினார்.

இந்நிகழ்வில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.