கோவையில் பேங்க் ஆஃப் பரோடா-வின் கடன் கண்காட்சி

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்காக பேங்க் ஆஃப் பரோடா வங்கி கோவை பிராந்தியம் சார்பில் நடத்தப்படும் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி இன்று (20.11.2021) கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கியது. இக்கண்காட்சியினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இன்று மற்றும் நாளை நடைபெறும் இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம்.

கண்காட்சி சிறப்பு சலுகையாக வீடு மற்றும் கார் கடன் வாங்குபவர்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் வட்டி விகிதம் மற்றும் பரிசீலனைக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்களுடன் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வங்கி சார்பில் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி கடன் ஒப்புதலும் அளிக்கப்படுகிறது.

இக்கண்காட்சியில் புது வீடு வாங்குவதற்கும், கட்டுவதற்கும் மற்றும் கார் வாங்குவதற்கும் எளிதாக கடன் பெறலாம். மேலும் இந்த கண்காட்சியில் கட்டுமானத் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனத்தினர் மற்றும் கார் முகவர்கள் இடம் பெறுகிறார்கள். எனவே மிகவும் குறைந்த விலையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், காலி இடங்களை குறைந்த விலையிலும், விரும்பும் இடத்திலும் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

அருகில் சென்னை மண்டல துணை பொது மேலாளர் ராஜவேல், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கோவை பிராந்திய துணை பொது மேலாளர் கதகல், கோவை பிராந்திய துணை மேலாளர் முருகைய்யா, கிரெடாய் அமைப்பின் மாநில செயலாளரும் மற்றும் அபினிதா ஃபவுண்டேஷன் இயக்குனருமான அபிஷேக், கோவை கிரெடாய் அமைப்பின் தலைவரும் மற்றும் கௌதம் எச்.எஸ்.ஜி. பி.லிட் இயக்குனருமான குகன், கோவை கிரெடாய் அமைப்பின் செயலாளரும் மற்றும் ஸ்ரீவத்சா ரியல் எஸ்டேட்ஸ் பி.லிட் இயக்குனருமான ராஜிவ், வி.ஜி.விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா மற்றும் பலர் உள்ளனர்.