கே.பி.ஆர். கலை கல்லுரியில் சிறப்புச் சொற்பொழிவு  நிகழ்ச்சி

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக “கன்ஸ்யூமர் ப்ரொடெக்க்ஷன் அக்ட் 1986” (CONSUMER PROTECTION ACT 1986) என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு  நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை உரை வழங்கி சிறப்பித்தார். வணிகவியல் துறைப் புல முதன்மையர் குமுதாதேவி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி, ஸ்ரீ ஈஸ்வர் & கோ நிறுவனர், வழக்கறிஞர் நித்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் நுகர்வோரின்  கடமைகள் மற்றும் உரிமைகள், நிபந்தனைகள் மற்றும் உத்தரவாதங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுரைத்தார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்தார். அவற்றின் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் விளக்கி உரைத்தார்.

வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் கவிதா இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து வழங்கினார். இக்கருத்தரங்கில் பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.