கோவை தர்மலிங்கேசுவரர் கோவிலில் மகா தீபம்

கோவையில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேசுவர மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

கோவையை அடுத்த மதுக்கரையில் தர்மலிங்கேசுவர சுவாமி கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை மகா தீப வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து மலையில் அமைந்துள்ள மூலவரான சிவனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில்,பக்தர்களுடன் கோவிலை வலம் வந்து, நந்தி தேவருக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து அடிவார பகுதியிலுள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தீபம் ஏற்றப்பட்டது.