அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் மற்றும் கிளவுட் கேம்பஸ் (CloudKampus) மையத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு கையெழுத்தானது

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வேந்தர் தியாகராஜன், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர், கவுசல்யா, முதல்வர் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) முருகேசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

CADD (CloudKampus) மையத்தின் பிரமுகர்களில் CADD மையத்தின் தலைவர் பார்த்தசாரதி, சித்ரா பார்த்தசாரதி, சந்தர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் அடங்குவர்.

CADD (CloudKampus) என்பது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பயிற்சி நிறுவனமாகும். இந்நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில், 1000 த்திற்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் எலட்ரானிக்கல், வடிவமைப்பியல், பொறியியல் மற்றும் தகவல் தொழிற்நுட்பவியல் துறை ஆகிய துறைக்கென்று கற்றல் முறையை அறிமுகம் செய்கிறது. இதில் மாணவர்களை மேம்படுத்த சான்றிததோடு பயிற்சியை வழங்குகிறது. இதில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களின் தொழிற்நுட்பத் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களின் வேலைவாய்ப்பில் மேம்படுத்த உதவும்.