மழை பாதித்த உக்கடம் பகுதியில் வானதி சீனிவாசன் ஆய்வு.

கோவை நகர் பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம் காந்திபுரம் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இந்நிலையில் உக்கடம் மீன் மார்கெட் அருகில் உள்ள தோபி கானா பகுதியில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.  இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

மக்கள் கோரிக்கைகளை தெரிவிக்க உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.