என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியின், முதுகலை வணிக மேலாண்மை துறை முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. துறைத் தலைவர் சாரதாமணி வரவேற்புரை ஆற்றினார்.

கே.எம்.சி.ஹெச் நிறுவனத்தின் செயலாளர் தவமணி பழனிசாமி மாணவர்களுக்கு கொடுத்த ஆலோசனையில் “ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள் யோசனைக்காக வேலை செய்யுங்கள், யோசனை உங்களுக்கு வேலை செய்யும்” என்ற மேற்கோளை எடுத்துரைத்தார்.

கல்லூரியின் முதல்வர் பிரபா தனது உரையில் “வாசகர் தலைவர் ஆவர், நல்ல தலைவர்கள் நல்ல வாசகர்களாக இருப்பர் என்றும் ஒரு சிறந்த தலைவராக இருக்க, மற்றவர் உறங்கும் நேரத்தில் நீ விழித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

துறை இயக்குநர் முத்துசாமி மாணவர்களுக்கு எடுத்துரைக்கையில், “சிறந்த தலைவனாக இருக்க சிறந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று உணர்த்தினார். மேலும் இந்திய தொழில் நுட்ப சாதனையாளர்களான, சுந்தர் பிச்சை, ரகுராம் ராஜன் , நிலெக்கணி ஆகியோர்களை எடுத்துக்காட்டாக கூறினார்.

சிறப்பு விருந்தினராக அவிநாசிலிங்கம் நிகர் நிலை பல்கலைக்கழகம், டீன் வணிகவியல் மற்றும் மேலாண்மை பள்ளி, சித்ரா மணி தனது சிறப்புரையில் “மேலாண்மை என்பது வேலையில் இணக்கம்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

மேலும் பல்வேறு துறை பேராசிரியர்கள்‌ மற்றும் இரண்டாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்