கோவையில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளி மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளி மாணவி சவுந்தர்யா செங்கதிரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தன்னம்பிக்கை பேச்சாளரும், எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, ஸ்ரீ பாலரிஷி பீடம் விஸ்வாசிரஸணி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை எலக்ட்ரானிக் மீடியா பயின்று வரும் சவுந்தர்யா செங்கதிர், கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியில் குரு மிருதுளா ராயிடம் பரதநாட்டியம் பயின்று வருகிறார். இவரின் பரதநாட்டியத்தில் பல்வேறு முகபாவனைகளை இவர் வெளிப்படுத்த பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியின் முடிவில் நடனமாடிய மாணவிகள் அனைவரையும் சிறப்பு விருந்தினர் மரபின் மைந்தன் முத்தையா பாராட்டி கவுரவித்தனர்.