என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா

எதிர்காலம் குறித்த தெளிவான செயல்திட்டம் வேண்டும் – டாக்டர். நல்ல.ஜி. பழனிசாமி

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் மைல்கல் சாதனைகள் பலவற்றை எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றிய முதல்வர் பிரபா, வளாகத்தில் உள்ள உயர்தரமான கற்றல் கற்பித்தல் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

கே.எம்.சி.ஹெச் நிறுவனத் தலைவர் டாக்டர். நல்ல. ஜி.பழனிசாமி தனது தலைமை உரையில், மாணவர்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்த தெளிவான செயல்திட்டம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் குறுகிய வட்ட சிந்தனைகளை விட்டு வெளியேறவும், உலகளாவிய வேலை வாய்ப்புகளை ஆராயவும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கல்லூரி தாளாளர் டாக்டர். தவமணி பழனிசாமி பேசியதாவது: மாணவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை எடுத்துரைத்ததுடன் கார்ப்பரேட் துறையின் எதிர்பார்ப்புகளையும், அவற்றை மாணவர்கள் எவ்வாறு எதிகொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார். இந்தியாவின் எதிர்காலம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை சார்ந்துள்ளது என்பதை வலியுறுத்திய அவர், அடுத்த தலைமுறைக்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.

கல்லூரி அறங்காவலர் டாக்டர்.அருண் பழனிசாமி, தனது உரையில் மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில் பொறியியல் துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூறினார். இக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் தொழில்துறை மற்றும் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பட்ட தொழில்துறை தொழில்நுட்பங்களில் நல்ல அறிமுகமும் அனுபவமும் பெறுவார்கள் என்று கூறினார்.

தலைமை விருந்தினரான செந்தில்குமார் கூறியதாவது, பொறியாளர்கள் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார். ஒரு பொறியாளர் ஆர்வம், தொலைநோக்கு மற்றும் குறிக்கோளுடன் தனது சிந்தனை செயல்முறையை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை செதுக்க தேவையான திறன்களுடன் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.