பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கதிரியக்கவியல் தினம் அனுசரிப்பு

உலக கதிரியக்கவியல் தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கதிரியக்கவியல் தினம்’ திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கதிரியக்கவியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ வசதிகளின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை இன்டெர்வெண்ஷனல் ரேடியாலஜி மூலம் குணப்படுத்தும் முறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரேடியாலஜி துறையின் கீழ் வரும் மற்றுமொரு பிரிவான இன்டெர்வெண்ஷனல் ரேடியாலஜி மூலமாக அறுவை சிகிச்சையின்றி நுண் துளை வழியாக பக்கவாதம், சர்க்கரை நோயினால் கால்களில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, வெரிக்கோஸ் சுருள் போன்ற நோய்கள் குணப்படுத்தப் படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பா ராவ், கதிரியக்கவியல் துறை சார்ந்த மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

(மேற்கண்ட செய்தி குறித்த விரிவான தகவலும், மருத்துவர்களின் நேர்காணல் தொகுப்பும் இன்னும் சில மணித் துளிகளில்…)