‘ஜி.யி.பி.24’ நெல் ரகத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய தமிழ்நாடு வேளாண் பல்கலை

நூற்று ஒன்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல் இனவிருத்தி நிலையத்திலிருந்து முதன்முதலாக வெளியிடப்பட்ட ‘ஜி.பிபி, 24’ என்ற நெல் ரகத்தின் நூற்றாண்டு விழா பொன்விழா காணும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்திய நெல் வல்லுநர் பத்மபூஷன் கி. ராமையா அவர்களால், 1921-ம் ஆண்டு இந்த இரகம் வெளியிடப்பட்டது. இந்தியாவிலும் அகில உலக அளவிலும் வெளியிடப்பட்ட சுமார் 800 க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்குப் பெற்றோராக விளங்கி உள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த நெல் ரகத்தை கௌரவிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட நூற்றாண்டு விழாவில் 200 க்கும் மேற்ப்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் மாணவ மாணவிகள் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.

பொன் விழாவை துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழக துணைவேந்தர் நீ. குமார் ஒரு ரகத்திற்காக இத்தகைய பொன்விழா கொண்டாடுவது வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வு என்று குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட தொழில் நுட்பங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்களிப்பு உயர் விளைச்சல் ரகங்களை பயிரிடுவதால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் கீதா பேசுகையில், இந்த ரகம் நூற்றாண்டுகளாக கடந்து வந்த பாதையில் இதன் மகத்துவம் மற்றும் பங்களிப்பை எடுத்துரைத்தார் மேலும் இந்த ரகத்தில் சடுதி மாற்ற ஆய்பு, உரம் மற்றும் நீர் மேலாணமை ஆய்வு, வறட்சியை தாங்கும் தன்மை, குலை நோய் எதிர்ப்புதிறன் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கினார்.

நெல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் கணேசமூர்த்தி, நெல்துறையின் பாரம்பரிய தோற்றம் மற்றும் வெளியிடப்பட்ட நெல் ரகங்களை எடுத்துக்கூறினார். இவ்விழாவிற்கு பன்னாட்டு நெல் விஞ்ஞானி குருதேவ்குஷ், பிலிப்பபைன்ஸின் பன்னாட்டு நெய் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஹன்ஸ் பரத் வாஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் அம்பேத்கார் மற்றும் முன்னாள் நெல் இனப்பெருக்க விஞ்ஞானி வில்பிரட் மேனுவல் ஆகியோர் இவ்விழாவை கௌரவித்து சிறப்புரை ஆற்றினார். பிலிப்பைன்ஸ் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஜவஹர்அலி நெல் மகசூலை அதிகரிப்பதற்பான வழி முறைகளை விளக்கினார்.