ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் 70வது  கிளை துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், தேசிய அளவில் தனது 70வது கிளையை கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் சனிக்கிழமை இனிதே தொடங்கியது. முதல் விற்பனையை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.வைத்தியநாதன் மற்றும் இயக்குனர் வைஷ்ணவி கிருஷ்ணன் தொடங்கி வைக்க வழக்கறிஞர் எஸ்.ஜோதிமணி பெற்றுக்கொண்டார்.

இந்தக் கிளை கோவை கிராஸ் கட் சாலையில் இரண்டாவது கிளை என்றும் வைஷ்ணவி கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , தீபாவளியை முன்னிட்டு ரிச் லட்டு, எஸ்.கே.எஸ் கிளாசிக் மற்றும் ட்ரடிஷ்னல் ட்ரீட் ஆகிய 3 புதிய  இனிப்பு மற்றும் பலகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் மட்டும் இதுவரை 25 கிளைகள் இருக்க, இந்த புதிய கிளையொடு மொத்தம் 26 கிளைகள் கோவையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.