மார்பகப் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறிந்து நீக்குவதற்கான ஒரு நவீன முறை

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் மாதத்தை நினைவூட்டும் விதமாக, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் – மார்பக சிறப்பு துறையின் முன்னணி மருத்துவர் டாக்டர் ரூபா ரெங்கநாதன், மார்பக புற்றுநோயினால் உண்டாகும் இறப்பைக் குறைப்பதற்கான ஒரே திறவுகோல் அதனை முன்கூட்டியே கண்டறிவது என்றும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

முன் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கே மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் உள்ளது என்ற நிலை மாறி, கடந்த 20 வருடங்களில் 30-40 வாயதிற்குட்பட்ட பெண்களிடையேயும் இந்த நோய் கண்டறியப்படுகிறது என்றும் அவர் கூறினார். மேலும், பல பெண்கள் கட்டிகள், முலைக்காம்பில் நீர் வடிதல் மற்றும் மார்பக வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை கண்டுகொள்வதில்லை, இது பெரும்பாலும் மார்பக புற்றுநோயை தாமதமாக கண்டறிவதற்கு வழிவகுக்கிறது என்று டாக்டர் ரூபா கூறினார்.

இது போன்ற நிலைமைகள் பற்றியும் மேலும் வாக்யூம்-உதவியுடன் செய்யப்படும் மார்பக பயாப்ஸி (VABB) போன்ற மேம்பட்ட நுட்பங்களைப் பற்றி பெண்கள் தெரிந்துகொள்வது அவசியம், இது ஒரு மேம்பட்ட மற்றும் நுண் துளை மூலம் பரிசோதனை செய்யும் தொழில்நுட்பமாகும், இது மிகச் சிறிய கட்டிகளை கூட மாதிரியாக சேகரிக்க உதவுகிறது. இளம் பெண்களில் பொதுவாக ஏற்படும் புற்றுநோய் அல்லாத சிறிய ஃபைப்ரோடெனோமா (Fibroadenoma) கட்டிகளை அழகை பாதிக்காமல் நுண்துளை சிகிச்சையான VABB மூலம் அறுவைச்சிகிச்சை இல்லாமலும் மற்றும் தழும்பு இல்லாமலும் அகற்ற முடியும். பைப்ரோஅடினோமா கட்டியை முழுவதுமாக அகற்ற FAB (USA) மற்றும் NICE (UK) ஆகியோரால் VABB அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட இந்த முறையானது, கடந்த சில வருடங்களாக நமது கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் மார்பக நோய்க்கான சிறப்புத் துறையில் (Breast Center) செய்யப்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் மார்பகத்தில் கட்டிகள் உட்பட எதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், தயங்காமல் பரிசோதனைகள் செய்து கொண்டால். மார்பக புற்றுநோயை மிகவும் ஆரம்ப கால கட்டத்திலே கண்டறிந்து அதனை குணப்படுத்த முடியும்.