கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்!

கோவை வ.உ.சி சாலை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.