கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்களுக்கு திமுகவினர் வாழ்த்து

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு கோவை மாவட்ட திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர் இரவிச்சந்திரன், கோவை மாவட்ட சார்பு நீதிமன்றங்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயராகவன், அரசு வழக்கறிஞர் சிவகுமார், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், முத்து விஜயன் ஆகியோர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அறையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ மற்றும் கணபதி பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள் தண்டபாணி, கணேஷ்குமார், மகுடபதி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பகுதி கழக பொறுப்பாளர்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், சிங்கை சிவா, நாகராஜ், மற்றும் திரளான வழக்கறிஞர்கள், திமுகவினர் பங்கேற்றனர்.