மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு சீர் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவையில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக மிதமானது முதல், கன மழை பெய்து வருகின்றது. இதனால், கோவை மாநகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம், பணிகளை முடக்கி விட்டு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்திரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அப்பகுதியில் அடைப்பட்டு இருந்த கழிவு நீர் கால்வாய்கலை சீர் செய்து, மழை நீரை வெளியேற்றவும் உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக சீர் செய்தனர்.