சிக்கலான இடத்தில் இருக்கும் பழ மண்டியை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சிக்கலான இடத்தில் இருக்கும் பழ கமிஷன் மண்டியை வேறு இடத்திற்கு மாற்றித்தரக்கோரி கமிஷன் ஏஜண்ட் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் புரூட்ஸ் கமிஷன் ஏஜெண்ட் சங்கத்தினர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சங்கத்தின் தலைவர் முகம்மது அலி கூறியதாவது:

கருப்ப கவுண்டர் வீதியில் 200க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியாகவும் உள்ளது. அதோடு, பல கனரக வாகனங்கள் இவ்வழியை பயன்படுத்துகின்றன. இதனால் எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு முறை பழ லோடு இறக்கும் போதும் ரூ.3 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்கு மாற்று இடம் ஏற்படுத்தித்தரக் கோரி முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம்.

எனவே எங்கள் பழ மண்டியை மாநகரிலேயே வேறு இடத்திற்கு மாற்றிக் கொடுத்தால் எங்கள் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறும் 10 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இதற்காக 3 இடங்களை பரிந்துரைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் முகம்மது ரஃபி, பொருளாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.