கொரோனா தொற்றிலிருந்து எளிதாக குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கொரோனா முதலாவது அலையில் பாதுகாப்பாக இருந்த குழந்தைகள், இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டனர். கோவிட் 19 ல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறிகுறிகள், லேசானது முதல் மிகவும் மோசமானது வரை உள்ளது.

இந்தியாவில் தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஊரடங்குகள் நீக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது அலையின்போது, குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு வந்தால், அது அனைவரையும் பாதிக்கிறது. எனவே, பொது இடங்களில் குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

காய்கறிகள், பழங்கள், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் போன்றவை அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எண்ணெய், மசாலா கலந்த சிற்றுண்டிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

லூபின்: ஆயுர்வேத மருந்து

லூபின் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஆயுர்வேத மருந்து, குழந்தைகளின் பசியை மேம்படுத்துவதால், தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த சத்தான உணவை அளிக்க முடியும். இந்த மருந்தில், சீந்திலை, நெல்லி, திப்பிலி போன்ற மூலிகைககள் உள்ளன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் மந்த்ராலயாவும் இதை சிபாரிசு செய்துள்ளது.

உணவு முறையுடன் போதுமான உடல் பயிற்சி, போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், தூக்கம் போன்றவைகளையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

புதுமையான மருந்துகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் முன்னணியில் உள்ள லூபின் நிறுவனம், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பொது காரணிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக், லடின் அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மருந்து விற்பனையை மேற்கொண்டுள்ளது.