வேலம்மாள் பள்ளியின் மகளிர் எறிபந்து அணி சாதனை

கடலூர் விருத்தாசலத்தில் உள்ள சி.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 10, வரை நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 19-வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட வேலம்மாள் மையப் பள்ளியின் மகளிர் எறிபந்து அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இந்த மாநில அளவிலான போட்டியை கடலூர் மாவட்ட எறிபந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது,
இதில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 அணிகள் பங்கேற்றன. கடுமையான சவால்களைச் சந்தித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வேலம்மாள் பெண்கள் அணி 15-13, 10-15, 13-15 என்ற அளவிலான புள்ளிகளுடன் வெற்றி பெற்றது.

வேலம்மாள் பள்ளி நிர்வாகம் வெற்றி பெற்ற அணியின் வியக்கத்தக்க இச்சாதனையைப் பாராட்டி ஊக்குவித்தது.