டாக்டர்‌ ஆர்.வி கலை கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த தினக் கொண்டாட்டம்

காரமடை டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியை முன்னிட்டு உலக மாணவர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ரூபா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தன் வாழ்நாள் முழுக்க மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய வாழ்க்கை வரலாறு அடங்கிய தொகுப்பு ஆவணப்படமாக கல்லூரி மாணவ, மாணவியருக்கு காண்பிக்கப்பட்டது.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆங்கிலத்துறை சார்பாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவன் செல்வன். முகிலன், மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கிரேஸ்லின் எடித், இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி ஆதினா, மூன்றாம் ஆண்டு தொழில்சார் வணிகவியல் துறை மாணவி ஆதிரா லக்ஷ்மி முதலிடம் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை தலைவர் ஜீவா, ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் கோகிலா மற்றும் பிரவீனா அவர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.