லோட்டஸ் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு

கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கண் பார்வை தினத்தை முன்னிட்டு கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சிட்டி இணைந்து ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை லோட்டஸ் கண் மருத்துவமனையின் Optometry பயிலும் சுமார் 100 மாணவர்கள் மூலம் லோட்டஸ் கண் மருத்துவமனை அவிநாசி சாலையில் உள்ள கிளையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ரோட்டரி கவர்னர் ரோட்டேரியன் எம்.டி.எஸ் ராஜசேகர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சங்கீதா சுந்தரமூர்த்தி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ராமலிங்கம், மருத்துவ இயக்குனர் டாக்டர் மதுசூதன் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து லோட்டஸ் கண் மருத்துவமனையின் துணைத் தலைவர், தமிழ்ச்செல்வன் கூறும்போது: உலக கண் பார்வை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக கண் பார்வை தினம் வருகின்ற அக்டோபர் 14ம் நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

கண் பார்வை தினமானது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண் பார்வை மற்றும் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது எனக் கூறினார்.

சிறப்பு சலுகையாக உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனையில் அக் 13 முதல் ஒரு மாத காலத்திற்க்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும். இந்த சலுகையை பெற முன்பதிவு அவசியம்.

தொடர்பு கொள்ளவும்: 74485 14851, 0422 4229970. முன்பதிவு செய்தவர்கள் இந்த சலுகையை நவம்பர் 14-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.