ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஜெனரேட்டர்

கோவை  இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 500 KVA ஜெனரேட்டர் வழங்கபட்டது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இதர நோயாளிகள் என பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 24 மணி நேர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மின் தட்டுப்பாடு நிகழாமல் இருக்கவும், தட்டுப்பாட்டை போக்குவதற்கும் ரவுண்ட் டேபிள் இந்தியாவின் முயற்சியால் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் ஜெனரேட்டரை மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

ஆர்டிஐ ஜிஎன் குழுமத்தின் சிஎஸ்ஆர் பங்களிப்பு மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய தலைவர் மோரியா பிலிப் இந்த ஜெனரேட்டரை மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீட்டர் ஜெயசீலன், ஜி என் குரூப் குணால் சங்கானி, விஷ்ணு பிரபாகர், பீட்டர் ஜெயசீலன், டி ஆர் கௌசிக், டி ஆர் நிரவ் , குணால் மற்றும் ஆர்டி -323 மற்றும் ஸ்பார்க் 323 உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.