கே.ஐ.டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே.ஐ.டி கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் இளநிலை பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பொறியியல் பட்டதாரிகள், மேலாண்மைக் கல்வி பட்டதாரிகள் அனைவரும் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மயில்சாமி அண்ணாதுரை, Vice president (Tamilnadu State Council for Science & Technology), Chairman (National Design and Research Forum Director (Retired) ISRO – Bangalore) கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் அவர் கூறுகையில்: சமூகத்தில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. அதை நாம், நம் திறமைகளை வளர்த்து பெற்று கொள்ள வேண்டும். திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அனைவருக்கும் உள்ளது என்று மாணவர்களிடம் விவரித்தார்.

சந்திராயன் மற்றும் மங்கள்யான் செயற்கை கோள் பற்றி மாணவர்களிடம் விவரித்தார். மாணவ மாணவிகள் தன்னம்பிக்கை இழக்காமல் கல்வி எனும் கருவியை பயன்படுத்தினால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார். மேலும் இன்றைய காலகட்டத்தின் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பின் முக்கியத்துவம், தேவைகள் மற்றும் நன்மைகளை எடுத்துக் கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா. பழனிசாமி தலைமை நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினார். கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரியின் துணை முதல்வர் ரமேஷ் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.