கோவையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

கோவையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கோவையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த மாதத்தில் இருந்து நீடித்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக கோவையில் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று காலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி 11 மணி வரை சூரியன் சுட்டெரித்தது. பிறகு திடீரென்று கருமேகம் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்பட்டது. அதை தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.

கோவை உப்பிலிபாளையம், அவிநாசி ரோடு, அண்ணா சிலை, பாப்பநாயக்கன்பாளையம் கணபதி, சரவணம்பட்டி, டெஸ்டூல் பாலம், சித்தாபுதூர், காந்திபுரம், சிங்காநல்லூர், மாநகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கோவையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.