சேரன் பார்மஸி கல்லூரியின் இளம் சிந்தனையில் உதித்த Dr. பார்மா

இணையவழிக் கல்வி, பயன்பாட்டில் இல்லாத காலக்கட்டத்தில் பார்மசி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த சில மென்பொருள் பயன்பாடுகளில் Dr.Pharma வும் ஒன்று. குறிப்பாக பார்மா D மற்றும் பார்மா B மாணவர்களுக்கு இணையவழி இலவச கற்றல் தளமாக இந்த மென்பொருள் விளங்குகிறது.

பார்மா மென்பொருளின் வழி தோன்றலே Dr.பார்மா ஆகும். இது 2019ம் ஆண்டு முகமது அப்சல் என்னும் நான்காம் ஆண்டு பார்மா D மனவரால் முற்றிலும் இலவசமாக மாணவர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.

Dr.பார்மாவின் கண்டுபிடிப்பாளரான அப்சல், தற்சமயம் கோவையில் உள்ள சேரன் பார்மஸி கல்லூரியில் பயின்று வரும் மாணவன். அப்சல் தன் கல்லூரிப் படிப்பின் ஆரம்ப நாட்களில், பார்மா பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பிற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் அவற்றிற்கான விளக்க உரைகள் கிடைக்காத நிலையை உணர்ந்தார். தன்னைப் போலும் தன் சக நண்பர்கள் போல், பார்மா சம்பந்தமான விளக்க உரை கிடைக்காத மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Dr.பார்மா.

அப்சல், தாமே ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்பதால் தன் பேராசிரியர் மற்றும் நண்பர்களின் உறுதுணையோடு ஒரு இளம் சிந்தனைகளின் ஒருங்கிணைப்பாக Dr.பார்மா வை உருவாக்கினார்.

அப்சல் மற்றும் அவரது நண்பர்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட Dr.பார்மா, தற்போது இந்திய அளவில் 70K பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளாக உள்ளது.

மருந்துகளின் முறைசார் பட்டியலோடும் அவைகளின் பயன்பாடுகளின் தன்மைகளை விளக்குவதாகவும் மற்றும் ஒரு மென்பொருளான பார்மாகோன் (Pharmacon) Dr.பார்மாவின் வழி April 2020–ல் உருவாக்கப்பட்டது. இது மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவ வல்லுநர்களுக்கும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

Dr. பார்மாவின் புகழ் பரவிவரும் நிலையில், நர்சிங் பயிலும் மாணவர்களுக்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. Dr.பார்மாவை இலவசமாக Google Playstore –ல் பதிவிறக்கம் செய்யலாம்.