எம்சிஇடி கல்லூரியின் மாணவர்களுக்கு கேப்ஜெமெனை நிறுவனத்தில் பயிற்சி

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கேப்ஜெமெனை இன்ஜினியரிங் (Capgemini Engineering) இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் செய்து கொண்டது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேப்ஜெமெனை இன்ஜினீயரிங்கின்
(Capgemini Engineering) இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்திரா ரெட்டி, நிர்வாக துணைத் தலைவர் பிரசாத் ஷெட்டி, துணைத் தலைவர் அனந்தகுமார் மணி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு, இயந்திரவியல் துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் தலைவர் சேவுக மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கேப்ஜெமெனை இன்ஜினியரிங் (Capgemini Engineering)இந்தியா நிறுவனம், தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சீமென்ஸ் பி எல் எம் டீம் சென்டர் (Siemens PLM Teamcenter) மென்பொருளைக் கொண்டு “உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மைத் தொழில்நுட்ப ஆய்வகம்” தொடங்குவதற்கு மகாலிங்கம் பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பயனாக கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையில் பயிலும் 50 மாணவர்களுக்கு கேப்ஜெமெனை இன்ஜினியரிங் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

கேப்ஜெமெனை நிறுவனம் உலகளவில் பல்வேறு நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் தொழில்நுட்ப ஆற்றலைப் பயன்படுத்தி தங்கள் வணிகத்தை மாற்றுவதற்கும் நிர்வகிப்பதற்கும் செயலாற்றி வருகிறது. கேப்ஜெமெனை நிறுவனம் சர்வதேச அளவில் 3 லட்சம் பணியாளர்கள் மற்றும் இந்திய அளவில் 1.5 லட்சம் பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.