வேதபாட சாலையில் கொலு கொண்டாட்டம்

கோவை ஆர்.எஸ். புரம் திருவேங்கட சாலையில் அமைந்துள்ள வேதபாட சாலையில் ஒன்பது நாள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

கடந்த 38 வருடமாக இயங்கி வரும் இந்த வேத பாட சாலையில் 50 மாணவர்கள் வேத பாடங்களை கற்று வருகின்றனர். இங்கு ரிக் வேதம், கிருஷ்ண யேஜுர் வேதம் ஆகியவை 6 ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து வேதம் பயிலுகின்றனர்.  கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நவராத்திரி பண்டிகை விமரிசையாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் உள்ள மாணவர்கள் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும்  கற்றுக் கொள்ள வேண்டி இந்தநவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் வேதபாட சாலையின் மேனேஜர் வேணுகோபால் மற்றும் இதன் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திக் கலந்து கொண்டனர்.