தேசிய தடகள போட்டியில் எஸ்.டி.சி மாணவி வெற்றி

தேசிய அளவிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகள போட்டிகள் புதுடெல்லியில் செப்டம்பர் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவி ஜிஜீ உயரம் தாண்டுதலில் 1.69 மீட்டர் உயரம் தாண்டி மூன்றாம் இடத்தை கைப்பற்றினார்.

வெற்றிப்பெற்ற மாணவியை கல்லூரியின் தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வி துறை இயக்குனர் பாரதி, துணை இயக்குனர்கள் ரேவதி, சதாம் உசேன் மற்றும் பயிற்சியாளர் அண்ணாவி உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர்.