கோவையில் லோக் ஜனசக்தி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்

கோவை அண்ணா சிலை பகுதியில், லோக் ஜன சக்தி கட்சியின் தேசிய பொது செயலாளர் ஜி.வி.மணிமாறன் தலைமையில், அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் என்பவரால் உருவாக்கப்பட்ட, லோக் ஜன சக்தி கட்சியின், செயல் வீரர்கள் கூட்டம் கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், லோக் ஜன சக்தி கட்சியின் தேசியபொது செயலாளர் ஜி.வி.மணிமாறன் தலைமையில், கட்சியின் நிர்வாகிகளுடன் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், பொதுமக்களிடத்தில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை கொண்டு சேர்க்கும் வகையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கட்சி, தற்போது மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சராக இருக்க கூடிய பசுபதி குமார் பராசுடன் இணைந்து பயணிக்கும் தமிழக பிரிவு. சமூகநீதி, பெண்களுக்கான கல்வி, பெண்களுக்காக விடுதலை, போன்ற பல்வேறு அடிப்படை கொள்கைகளை கொண்டு இந்த கட்சி செயல்பட்டு வருகின்றது. மறைந்த தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு நாள் அக்டோபர் 8ம் தேதி வர உள்ளது. அதனை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்

இதன் மூலமாக தமிழகத்தில் மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில், எங்களது கட்சியினை பலப்படுத்தமுடியும்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜனசக்தி லேபர் யூனியன் அமைப்பின் தலைவர் துரைராஜ், மாவட்ட விவசாய பரிவு தலைவர் பிரகாஷ் பாஸ்வான், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரசாமி, பாலாஜி, தொகுதி தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.