மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி பேரூர் படித்துறையில் கூடிய பொதுமக்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி பேரூர் படித்துறையில் கூடிய பொதுமக்களை வட்டாச்சியர், காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவையில் உள்ள முக்கிய கோவில்களில் தர்பணம் செய்ய பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளதால், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் மற்றும் தர்பனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தனர்.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறி கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றக்கறையில் தர்பனம் செய்ய பொதுமக்கள் அதிகளவு கூடி வருகின்றனர்.