வேளாண் பல்கலையில் இளநிலைப் பட்டப்படிப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்பிற்க்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலைப் பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் (2021 – 2022) இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  (08.09.2021) முதல் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மற்றும் பொது மக்களிடமிருந்து வைக்கப்பட்டது. பன்னிரெண்டு (12) இளநிலை பட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி (18.10.2021) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.