உள்ளாட்சி தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – தொழிலாளர் உதவி ஆணையர்

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடிய இடங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் வரும் 9ம் தேதி சனிக்கிழமையன்று கோவை உட்பட பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 பி – இன் படி சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுசாமி மற்றும் இணை ஆணையர் லீலாவதி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும்.

இது தொடர்பாக ஏற்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.