பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

ஒவ்வொரு13 நிமிடத்திற்கும் மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர்

உலக சுகாதார அமைப்பு அக்டோபர் மாதம் 1 முதல் 31ம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பக புற்று நோய் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆய்வுகளின் படி 14 % இந்தியப் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என கண்டுபிடிக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு 13 நிமிடத்திற்கு ஒருவர் இப்புற்றுநோயால் இறந்து போகிறார்.

ஒவ்வொரு வருடமமும் சுமார் 1.38 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 4,58,000 பெண்கள் இறந்து போகின்றனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2030ம் ஆண்டு மற்ற எல்லா விதமான நோய்களால் இறந்து போவதைக் காட்டிலும் அதிக பெண்கள் மார்பக புற்றுநோயால் இறந்து போக நேரிடும் என மருத்துவக் கணிப்பு கூறுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் 99% பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை 5 வருடம் நீட்டிக்கலாம்.

மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியானது வருடந்தோறும் இந்த மார்பக புற்றுநோய் விழுப்புணர்வு மாதத்தை எண்ணற்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கிறது. இவ்வருடமும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த Pinky’S Life @ Musilyrically என்ற பாட்டு பாடி போட்டியை மாணவர்களுக்கும் மக்களுக்கும் இணைய வழிதளம் மூலமாக நடத்துகிறது.

மேலும் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படும் முடி உதிர்வினால் சிகிச்சைக்கு பின் வாங்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக செரியன் பவுண்டஷன் இணைந்து Hair 2 Share என்ற முடிதானம் செய்யும் நிகழ்வு மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டஷன, பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை உடன் இணைந்து புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் கண்காட்சியும், இளஞ்சிவப்பு ரிப்பன்கள் மரத்தில் கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டி அவர்களிடையே ஆக்கப்பூர்வமான எண்ணங்களை வித்திடும் பிங்க் வாரியர்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.