டாக்டர் ஆர்.வி. கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க நிகழ்வு

மேட்டுப்பாளையம் சாலையில் காரமடையில் உள்ள டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார். கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மொழித் துறைத் தலைவர் விஸ்வநாதன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், “வாழ்க்கையில் மதிப்புமிக்கது கல்வி, பொன், பொருள், ஆபரணம் இவற்றில் எதை வெண்டுமானாலும் நாம் மற்றவரிடமிருந்து பெற முடியும். ஆனால் கற்ற கல்வியையும் அதனால் பெற்ற அறிவையையும் ஒருபோதும் பெற முடியாது.

நமக்கு கிடைக்கின்ற வாய்ப்பை உதாசீனப்படுத்தக் கூடாது. எந்த உருவத்திலும் வாய்ப்பு நம்மை வந்து சேரும். பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு வரலாறாக வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியது போல நாமும் வரலாற்றில் இடம் பெறுபவராக வாழ வேண்டும். நாம் கற்கும் நல்ல விசயங்களை பசுமரத்தாணி போல பதிய வைத்து கொள்ள வேண்டும்.‘

நாம் கற்கின்ற கல்விதான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்ற பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.