கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மாநில அளவிலான அனைத்து வகையான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.

ராஜா எம்.எம்.ஏ அகாடமி கிராண்ட் மாஸ்டர் ராஜா சார்பாக நடைபெற்ற இதில் திருப்பூர், ஈரோடு, சென்னை, தேனி, நாமக்கல், கரூர், கோபி உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த தற்காப்பு கலை போட்டியில் முல்லை ஸ்போர்ட்ஸ் அகடாமி முதலாவது ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். இரண்டாவதாக ஆன்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமியும், மூன்றாவதாக ஃபயர் டிராகன் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் பதங்ககங்களை தட்டி சென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானவேல் ராஜா, தங்கம் ஷாப்பிங் மால் சேர்மன் தங்கவேல், AMP மற்றும் காஃபி ரெடி நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மாணவ மாணவியர், பெற்றோர் உட்பட அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.