அமிர்தா வித்யாலயம் பள்ளி முதல்வருக்கு “குளோபல் முதல்வர்” விருது

நியூடெல்லி குளோபல் டாக் கல்விக் கழகம் திறன் மற்றும் தொழிற்கல்வியின் உலகளாவிய கல்வி சம்மிட், குளோபல் முதல்வர் விருதை திருப்பூர் அமிர்தா வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஸ்ரீ.வித்யாசங்கருக்கு வழங்கியுள்ளது.

கல்வித் துறையில் தேசிய தாக்கத்தை கொண்ட பள்ளி மற்றும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்காக தனது தொழில் வாழ்க்கையை அர்பணித்துள்ள சிறந்த பள்ளி முதல்வரை இந்த விருது அங்கீகரிக்கிறது. திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன், கல்லூரி முதல்வருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.