மாநில ஜூனியர் வலுதூக்கும் போட்டி: எஸ்.டி.சி மாணவர்கள் வெற்றி

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பில் 38 வது மாநில அளவிலான ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர்கள் அஸ்வல்ட் பிரவீன்ராஜ் +120 கிலோ எடைப்பிரிவில் 660 கிலோ எடை தூக்கி முதலிடத்தையும், சஞ்சய்குமார் 120 கிலோ எடைப்பிரிவில் 782 கிலோ எடைதூக்கி முதலிடத்தையும், கருப்புசாமி 53 கிலோ எடைப்பிரிவில் 457.5 கிலோ எடைத்த்தூக்கி முதலிடத்தையும் , ரூபன் 105 கிலோ எடைப்பிரிவில் 757.5 கிலோ எடை தூக்கி மூன்றாம் இடத்தையும், கோகுல் மாணிக்கம் 74 கிலோ எடைப்பிரிவில் 622.5 கிலோ எடைதூக்கி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினார்.

மேலும் மாணவர்கள் அஸ்வல்ட் பிரவீன்ராஜ், சஞ்சய்குமார், கருப்புசாமி ஆகியோர் ஜனவரி 2022 இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும்  தேசிய ஜூனியர் பளுதூக்கும் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கின்றனர்.

மேற்கொண்ட சாதனை மாணவர்களை கல்லூரியின் தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குநர் நந்தகோபால், உடற்கல்வித்துறை இயக்குநர் பாரதி, துணை இயக்குநர்கள் ரேவதி, சதாம் உசேன் ஆகியோர் பாராட்டினர்.