ஸ்வராஜ் நிறுவனத்தின் ப்ரோ கம்பைன் 7060 ட்ராக்டு ஹார்வெஸ்டர் அறிமுகம்

நெல் வெட்டுவதற்கான புதிய வெட்டுக்கம்பி பொருத்தப்பட்ட புதிய ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 – யை அறிமுகம் செய்துள்ளது.

நெல் மற்றும் சோயாபீனை திறம்பட அறுவடை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஸ்வராஜின் இந்த புதிய கம்பைன் ஹார்வெஸ்டர், மிகக்குறைவான தானிய இழப்பு மற்றும் சேதாரத்துடன் அறுவடையை, களை நீக்குதலை, கதிரடித்தலைத் திறம்படச் செயல்படுத்துகிறது.

கரடுமுரடான, ஆற்றல்மிக்க, எரிபொருள் திறன்மிக்க வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 நம்பகமானது, ஒரு 72ஹெச்பி அட்2300ஆர்பிஎம் என்ஜின் பொருத்தப்பட்டது. பாதுகாப்பில் கவனம் செலுத்தும் விதமாக, வயல்வெளியில் தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளில் இருந்து மின்கசிவு ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஒரு ஓவர்ஹெட் கார்டும்இந்த ஹார்வெஸ்டரில் உள்ளது.

இது பற்றி எம் அண்டு எம் நிறுவனத்தின் ஸ்வராஜ் பிரிவுக்கான தலைமை நிர்வாக அலுவலர் ஹரிஷ் சவான் பேசுகையில், அறுவடைக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தொழில்நுட்பப் பயன்பாடு விவசாயத்தில் பெருகிவரும் சூழலில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 கிடைக்கச் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். குறைவான கழிவு மற்றும் செயல்பாட்டு நேரத்தினால் விவசாயிகளுக்குப் பெருமளவு வருமானத்தை உறுதி செய்யும் வகையில், எங்களது புதிய தயாரிப்பான அதிகபட்ச செயல்திறன், தரம் மற்றும் அறுவடையை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலுள்ள மிகப் பரந்தளவிலான ஸ்வராஜின் சில்லறை விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க் வழியாக ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 விற்பனை செய்யப்படுகிறது. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் ஹார்வெஸ்டரை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் நிதியுதவி மூலம் வாங்கலாம். ஈரமான, மிதமான வயல்வெளிக்கு ஏற்ற ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 ஒரிஸா, மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானாவிலும் கிடைக்கும்.