வேலம்மாள் கல்வி அறக்கட்டளை குடும்பத்தின் புதுமணத் தம்பதியரை வாழ்த்திய முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் குடும்பத்தின் புதுமணத் தம்பதியரை (27.09.2021) வாழ்த்தினார்.

சமீபத்தில் திருமணம் நடைபெற்ற வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் அவர்களின் பேத்தியும், வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் அவர்களின் மகளுமான சிவானி மற்றும் மருமகன் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின் போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.