ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மனித உடலின் ஓய்வில்லாத இயந்திரம்… இதயம்!

நம் உடலில் இடைவெளி இல்லாமல் ஓயாது செயல்பட்டு வரும் உறுப்பாக இருதயம் உள்ளது. இது துடிப்பது நின்றால் வாழ்வு அடங்கிவிடும் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மாற்றங்களால் நம் ஆயட்காலத்தை நாமே குறைத்துக் கொண்டு வருகிறோம். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருதய நோய் மாறிவிட்டது. அதிலும் நம் நாடு அதில் முதல் இடத்தில் இருக்கிறது.

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வந்தனர், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடுத்தர வயதுடையோரும் பாதிக்கப்படுகின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் நகர வாழ்க்கையின் தன்மை போன்றவை உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு வழியில்லாமல் செய்து விடுகின்றன. இதன் காரணமாக ஆரோக்கியமாக இருக்கும் இளம் வயதினர் கூட ஏதாவது ஒரு கட்டத்தில் இருதய நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒருபுறம் பாதிப்பு ஏற்பட்டாலும் இன்னொருபுறம் அதை சரிபடுத்தக்கூடிய வகையில் மருத்துவ முன்னேற்றங்களும் வந்துவிட்டன.

அந்த வகையில் இதயம் சார்ந்த அனைத்து பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கும் நவீன தொழில்நுட்பக் கருவிகளையும், அனுபவம் பெற்ற திறமையான மருத்துவர்களைக் கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த தரமான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

உலக இருதய தினத்தை (செப்டம்பர் 29) முன்னிட்டு இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிமுறைகள் குறித்தும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக உள்ள வசதிகள் பற்றியும் மருத்துவமனையின் இருதய துறையின் மருத்துவக் குழுவினர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களின் தொகுப்பினைக் காண்போம்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான சிகிச்சை!

“இதயங்களை இணைப்போம்” என்ற தலைப்பில் இந்த ஆண்டு உலக இருதய நாள் அனுசரிக்கப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இருதய நோய்கள் குறித்து அனைவரும் ஓரளவு அறிந்திருப்போம். இந்த உலக இருதய நாளை முன்னிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இருதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரின் கடமை என்று சொல்லலாம்.

இருதய நோய்க்கான காரணிகள் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வளர்ச்சி பெற்று வருகின்றன. ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, புகைபிடித்தல், போதுமான து£க்கமின்மை போன்றவைகள் இருதய நோய் ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.

இந்த தருணத்தில், உலக அளவில் பல்வேறு நாடுகளில் மாரடைப்பு நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து செல்வது அவசியம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் பகிரப்பட வேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயம் தொடர்பான குறைகளுக்கு மிகசிறந்த முறையில் தீர்வளித்து வருகிறோம்.

எங்கள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை அவரவர்களுக்கு ஏற்படக்கூடிய இருதய பிரச்சினைகளுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 3 சிறப்பு இருதய பரிசோதனை அரங்குகள் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தாலும், அதற்கு ஏற்ற வசதிகளும், சிகிச்சை முறைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

பல சமயங்களில், அறுவை சிகிச்சையில்லாமல், நுண்துளை அறுவை சிகிச்சை முறையிலும் வால்வுகளை மாற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களும் பயனடையும் வகையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவில் இருதய சிகிச்சை அளித்தமைக்கான விருதையும் எங்கள் மருத்துவமனை பெற்றுள்ளது.

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்!

கோவிட் தொற்று போன்ற இந்த பேரிடர் காலகட்டத்திலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறப்பான முறையில் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

22 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு இந்த மருத்துவமனையில், பைபாஸ், வால்வு மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்பைத் திறக்காமல், நுண்துளை அறுவை சிகிச்சை முறை இங்கு மேற்கொள்ளப்படுகிறது. கோவிட் தொற்றால் இருதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எக்மோ சிகிச்சையும் தரப்படுகிறது. இருதய மாற்று சிகிச்சை, வால்வுகள் மாற்று சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.

இவைத் தவிர, மாரடைப்பால் மருத்துவமனைக்கு வருவோர் தொடங்கி தீவிரமாக பாதிக்கப்பட்ட இருதய நோயாளிகள் வரை அனைவருக்கும் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருதயம் தொடர்பான எந்த சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிகிச்சைப் பிரிவு தயாராக உள்ளது.

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் இருதய பாதிப்பு!

இருதய நோய் யாரையும் விட்டு வைப்பதில்லை. பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் குழந்தைகளில் சராசரியாக 10 குழந்தைகளுக்கு இருதய குறைபாடுகள் இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இருதயக் கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 2 லட்சமாக உள்ளது. குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு சாதாரணமானது முதல் சிக்கலான பாதிப்பு வரை இருக்கலாம்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன இருதய சிகிச்சைக் கருவிகள் உள்ளன. 20 வார கருவில் உருவாகும் சிசுவிற்கும் இருதயம் சரியான வளர்ச்சியில் உள்ளதா என்பதை அறிய முடியும். பரிசோதனையில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தால் கருவுற்ற தாயை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை பிறக்கும் வரை தாயை கவனமுடன் கவனிக்க எங்கள் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. சமீபத்தில் 900 கிராம் எடையுள்ள குழந்தைக்கும் சிகிச்சை அளித்துள்ளோம். இந்த சிகிச்சைகள் உலகத்தரம் வாய்ந்தவை.

குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற எடை இல்லாமை, மூச்சு விடுவதில் சிரமம், நகம் நீலமாக மாறுதல், சரியாக பால் அருந்த முடியாத நிலை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி இதயத்திற்கு உண்டான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். பாதிப்பு கண்டறியப்பட்ட பின் தாமதிக்காமல் முறையான சிகிச்சை அளித்தோம் எனில் அக்குழந்தைகளும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் தனி பிரிவும் உள்ளது. கருவில் உள்ள குழந்தைகளின் இதய செயல்பாடுகள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பரிசோதனை செய்யவும், தகுந்த சிகிச்சை அளிக்கவும் இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.