கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறப்பு

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்து அதன் காரணமாக திங்கட்கிழமை (20.09.2021) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக முன்னறிவிப்பின்றி கோவை குற்றாலம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

நீர் வரத்து குறைந்ததால், இன்று முதல் கோவை குற்றாலத்துக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே மாதம் வனத்துறையினர் தடை விதித்தனர். நான்கு வாரங்களுக்குப் பின், கடந்த 6ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்தது.

கோவை குற்றாலத்துக்கு செல்ல விரும்புவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.