சிடார்க் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம்

உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான தரம் மற்றும் பரிசோதனை ஆராய்ச்சி மையமாக சிட்டார்க் உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்கூட சோதனை மற்றும் ஆராய்ச்சி மையமான சிட்டார்க் (SITARC), தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கோவை மாவட்ட சிறு தொழில்களுக்கான சங்கம் ஆகிய தொழில் அமைப்புகளால் 1987ல் தொடங்கப்பட்டது.

சிடார்க் அமைப்பின் 34 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் 2021-2022 ஆண்டிற்கான நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் தலைவராக சூப்பர்டெக் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக பங்குதாரர் செந்தில்குமார், துணைத்தலைவராக அக்ஃப்ளோ, நிர்வாக பங்குதாரர் மோகன் செந்தில்குமார், செயலாளராக ஓம் முருகன் இண்டஸ்ட்ரீஸ் கார்த்திகேயன் மற்றும் பொருளாளராக பெஸ்ட் என்ஜினீரிங் பம்பஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.