தூய்மை பணியாளர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திக் வரவேற்பு உரையாற்றினார். கல்லூரி முதல்வர் உமா மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி தலைவர் அருள்குமார், வார்டு செயலாளர்கள் பிரபாகரன், ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் முதலுதவி குறித்தான விழிப்புணர்வு பற்றி பேசினார். அவர் பேசும்போது “தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய்களில் சுகாதார பணிகளில் ஈடுபடும்போது கால்வாய்களை ஒட்டி பதிக்கப்பட்டுள்ள மின்சார வயர்களின் மூலமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி செய்முறை விளக்கத்துடன் கூறினார்”.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.