மோடி பிறந்த நாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கோவையில், பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து பா.ஜ.க.,வினர் கொண்டாட்டத்தில் (17.09.2021) ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதிலும் பா.ஜ.க தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கோவையில் பல்வேறு இந்து அமைப்பினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானங்கள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட பாஜக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை, பிறந்த 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உட்பட 10 பேருக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் மதன் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.