கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

சமூக சீர்திருத்தவாதி ‘பெரியார்’ பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் சுயமரியாதை, பகுத்தறிவு, சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம் மற்றும் சமூக நீதி கொள்கைகளை பின்பற்ற உறுதிமொழி எடுத்தனர்.

இந்த உறுதிமொழி ‘பெரியாரின்’ வாழ்க்கையால் நினைவு கூறப்பட்டது, அவருடைய கொள்கைகளில் சாதி ஒழிப்பு மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம் ஆகியவை அடங்கும் மற்றும் மற்றவர்கள் சொல்லத் தயங்கிய பல சமூக நல கருத்துக்களையும் அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சி கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, வழிகாட்டுதலின் பெயரில், கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் அகிலா, மற்றும் கல்லூரியின் முதன்மை செயலர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.